முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொலை செய்யப்பட்ட பின்னர், கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை தன்னால் அறிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். எமது மக்கள் சக்தி கட்சியினை சமன் பெரேராவின்... Read more »
இணையத்தள செயற்பாடுகள் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024 இலக்கம் 9 நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு அமைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது ஒருவரை தேவையற்ற வகையில் அசௌகரியத்திற்கு... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற... Read more »
தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கை 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் இலங்கை... Read more »
சமூக வலையத்தங்கள் மற்றும் செய்தி மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்பு நகல் சட்டம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நகல் சட்டத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து... Read more »
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில்... Read more »
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷ்சங்க... Read more »
பெலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஒப்பந்த கொலையாளியாக செயற்பட்ட முன்னாள் கடற்படை வீரரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் நில்லேவெல,முத்தரகம பிரதேசத்தில் நேற்று... Read more »
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். ஜனவரி 29ஆம் திகதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இவரது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்க அரச வர்த்தமானியில் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

