ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்கும். ஜனாதிபதியினால் 2024.09.24 திகதியன்று வெளியிடப்பட்ட 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும். மக்களால் தெரிவு... Read more »
இலங்கையில் இவ் வருடத்தில் மாத்திரம் 2000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. இணையக் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக 9500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல... Read more »
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (11)... Read more »
பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அடையாளத்தை... Read more »
பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை... Read more »
சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு விலையை தாண்டி அதிகரித்ததுடன்,... Read more »
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார். (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாக்கு எமது... Read more »
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில்... Read more »
புல் தின்னும் மக்கள் இங்கு இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் பேசுகையில், “இப்போது தோழர் ஜனாதிபதி... Read more »
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாது எனவும் மேடையில் வழங்கிய வாக்குறுதிகள் வருமானத்தை குறைத்து செலவுகளை அதிகரிக்கச் செய்யும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். வத்தளை தேவாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து... Read more »

