இலங்கையில் இவ் வருடத்தில் மாத்திரம் 2000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இணையக் குற்றச் செயல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக 9500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவின் பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இவற்றில் 981 வழக்குகள் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புட்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந் நிலை இணைய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவலை ஏற்படுத்துகிறது.
இணைய மோசடிகள் சம்பந்தப்பட்ட 1600 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறான இணைய அச்சுறுத்தல்களின் அதிகரிப்பு, ஒன்லைன் பயனர்களின் பாதுகாப்பு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கக்கூடிய வலுவான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை அடிகோடிட்டுக் காட்டுகிறது.