மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம்... Read more »

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை மேற்கோள்காட்டி, அசோக ரன்வல... Read more »
Ad Widget

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை மற்றும்... Read more »

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு... Read more »

பாரவூர்தி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் பலி, ஒருவர் காயம்

கற்பிட்டி – பாலவியா பிரதான வீதியில் நேற்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முந்தலம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள்... Read more »

பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை தேசிய கட்டிடப் பொருள் ஆய்வு திணைக்களம் விடுத்துள்ளது. இவ்வனர்த்த... Read more »

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று நாளை உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் அதனைத்... Read more »

கால நிலையையும் பொ௫ட்படுத்தாது கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் யாழ் மக்கள்*

கால நிலையையும் பொ௫ட்படுத்தாது கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் யாழ் மக்கள் Read more »

சபாநாயகர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் முன்மொழிவு

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான... Read more »

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உட்பட மேலும் பலர் போலிப் பட்டங்களுடன் : பெயர் பட்டியல் வெளியானது !

அசோக ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியசிறீ குமார ஜெயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரின் கல்வித் தகைமைகள், பட்டங்கள் உண்மையானவையா என்ற... Read more »