இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு

மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதற்கமைய இன்று (01.03.2023) நள்ளிரவு... Read more »

பாடசாலை மாணவியை தவறு செய்ய தூண்டும் வகையில் வட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பிய ஆசிரியர்

பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நடன ஆசிரியர் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய... Read more »
Ad Widget

யாழில் புலனாய்வு பிரிவு என தம்மை அடையாளம் காட்டி கொள்ளை!

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில், நேற்றைய தினம் குறித்த நபர்... Read more »

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!

நாட்டின் அரிசி விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரிசியின் விலைகள் குறிப்பிட்டளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெல் கொள்வனவு செய்யும் போது விதிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் நெல் கொள்வனவின் போது 2.5 வீதம் சமூகப்... Read more »

மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவி பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில்... Read more »

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(28.02.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக... Read more »

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் புதிய பேருந்துகள்

வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச துறையும், தனியார் துறையும் இணைந்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்... Read more »

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது. அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி, இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி... Read more »

முழுமையாக ஸ்தம்பிதமடைய இருக்கும் இலங்கை

இலங்கையில் இன்றைய தினம் (01-03-2023) துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வரிச் சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, குறித்த... Read more »

லொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாதவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இவ்வாறான மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள்... Read more »