இறுதி சடங்கிற்காக லண்டனிற்கு எடுத்துச் செல்லப்படும் பிரித்தானிய மகாராணியின் உடல்

பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியுள்ளார். இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் பால்மோரலில்... Read more »

சாணக்கியனின் குற்றச்சாட்டை கடுமையாக கண்டிக்கும் நாமல் மற்றும் பிள்ளையான்!

எமது தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் உள்ளதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாதென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். தான் சபையில் இல்லாத நேரத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய... Read more »
Ad Widget

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை!

இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் கொட்டாபாட்டோ நகரில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை இலங்கையைச் சேர்ந்த 46 வயதான மொஹமட் ரிப்பார்ட் மொஹமட் சித்திக் என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சித்திக்கின் தலையிலும்... Read more »

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். பர்லிங்டன் நகரை சேர்ந்த 23 வயதான சுக்கிரன் ஸ்ரீதரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Waterdown and Plains சாலைகளுக்கு அருகில் உள்ள ஆல்டர்ஷாட் உயர்நிலைப் பள்ளி... Read more »

பிரித்தானிய மகா ராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானதையடுத்து, இலங்கையில் அனைத்து பொது கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். மேலும், பிரித்தானிய மகா ராணியின்... Read more »

இரகசியமான முறையில் கொல்லப்பட்டு காட்டினுள் புதைக்கப்பட்ட சிறுமி!

இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வர்ணகலசூரிய முதலி பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா ஹர்ஷனி குமாரி என்ற சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச்... Read more »

சவப்பெட்டிகள் மற்றும் இறுதி கிரியைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு!

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 60 ஆயிரம் ரூபா அதன்படி 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை... Read more »

தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை பதம் பார்த்த மருமகள்

இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது மருமகள் விஜயா அதிக சத்தத்துடன் டிவி பார்த்து கொண்டு... Read more »

பச்சை குத்துவது குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், முறையான ஒழுங்கு... Read more »

கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் பிக்குமார்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்குகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீ போதிராஜா மாவத்தையின் முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே,... Read more »