அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு... Read more »

யாழில் மூக்குக் கண்ணாடிக் கடை உரிமையாளர் போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர் 35 வயானவர் என கூறப்படுகின்றது. குருநகரை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருளை விற்பனைக்காக மூக்கு... Read more »
Ad Widget

காதலியை சந்திக்க பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் சென்ற இளைஞனால் பரபரப்பு!

கன்னியாகுமரியில் காதலியை சந்தித்து பேச, பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில்... Read more »

குளியலறையினுள் குழந்தை பெற்றெடுத்த பாடசாலை மாணவி!

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணவி குளியலறையில் இருந்தபோது அங்கு குழந்தை அழும் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறையை திறந்துள்ளார். இதன்போது... Read more »

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன!

இன்றையதினம் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியே இவ்வாறு பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை... Read more »

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி தொடர்பில் அவரது தாயார் வழங்கிய தகவல்!

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா... Read more »

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் அன்பு புரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட ‘வினிவித பவுன்டேஷன்’ ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழிலாளர்களுக்கும்... Read more »

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு!

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களின் இல்லங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம்... Read more »

பொருளாதார நெருக்கடியால் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உடப்பட்ட பிரிவில் 931 குழந்தைகள் பாதிப்பு!

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 931 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட வினாவுக்கு பதில் வழங்கிய போதே அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வவுனியா... Read more »

இலங்கையில் பிளவுபட்ட தமிழ் அரசியல் கட்சிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம்... Read more »