அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு!

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர்களின் இல்லங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்குவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளா நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
இந்த கொலை மிரட்டல் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்துவது குறித்து இவ்வாறு இரண்டு உறுப்பினர்களுக்கு தொலைபேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கே.பீ.பீ. பத்திரன மற்றும் எஸ்.பி. திவாரட்ன ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor