லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.... Read more »

தைப்பூச நாளான இன்று வழிபாடு செய்யும் முறை

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம்.... Read more »
Ad Widget

பெற்றோலின் திடீர் விலை அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கு பாரிய வரி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு... Read more »

பின்னணி பாடகி வாணிஜெயராம் மரணத்தில் மர்மம் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார்

இந்திய திரையுலக புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மரணம் இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் பாடகி வாணி ஜெயராமின் மரணத்தை இவ்வாறு வகைப்படுத்தியுள்ளனர். 78 வயது வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று உயிரிழந்து கிடந்த நிலையில்... Read more »

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிவரவுள்ளன

கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனித்துவமான விடயங்களை உள்ளடக்கிய மரண விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் அடங்கியுள்ளதாக மரண விசாரணை... Read more »

திருகோணமலை வீதி ஒன்றில் சிசு ஒன்று உயிருடன் மீட்பு!

திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியில் பசளை உரையில் போடப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனது பிள்ளைக்காக மருந்து எடுப்பதற்காக நேற்று(04.02.2023) கன்னியா சர்தாபுர வீதியினூடாக பயணித்துள்ளனர். இதன்போது பசளை உரையில் வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்று இருப்பதை... Read more »

இந்திய ரூபாவை இலங்கையில் விரிவுபடுத்த ஆலோசனை!

கொழும்பின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவை பயன்படுத்தி தீவு நாடு இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடியின் போது இந்தியா விரைவாக செயற்பட்டதாகவும், 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது... Read more »

சித்தியின் கொடுமை தாங்க இயலாமல் பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி!

சித்தியின் கொடுமை காரணமாக 11 வயது சிறுமியொருவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக ஹொரொவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகள் உள்ள கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும்... Read more »

மார்ச் மாதம் 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்க தீர்மானம்!

மார்ச் மாதம் புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களையும் நியமிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

வரியை குறைக்க தீர்மானிக்கும் அரசு!

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த வருமானத்தைக் கணக்கிடும் போது அவர்களின் மாத வருமானத்தை நிதிப் பலனாகக் கருதி அறவிடப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊழியர்களின் சொந்த வீடுகள், வாகனங்கள், எரிபொருள் அல்லது போக்குவரத்து கொடுப்பனவுகள் போன்றவற்றினை கருத்திற்கொண்டு மாதாந்த நிதி... Read more »