அபராத தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிதி பெறுமதியுடன் ஒப்பிடும் போது அபராதத் தொகையை மீளாய்வு செய்வதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

சிங்களத்தால் நாட்டை முன்னேற முடியாது! பகிரங்கமாக அறிவித்த சஜித்

சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம்... Read more »
Ad Widget

கிளிநொச்சி நெற்செய்கையில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஏக்கர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நோய் தாக்கங் கள் அதிக அளவில் உணரப்பட்டிருப்பதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி சூரியகுமார் தெரிவித்துள்ளார். இதனால் அந்தந்த பகுதி விவசாய போதனாசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்று அதற்கு... Read more »

ADBயினால் இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால்(ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இரண்டாவது கடன் தவணை கிடைக்கப்பெற்ற பின்னர், கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

உழவு இயந்திர கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயது குழந்தை பலி

உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு மூன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக் கூடிய கலப்பையை வீட்டில் வைத்து இயக்கிக் கொண்டு... Read more »

போலந்து பெண்ணை சீண்டிய பிக்கு கைது

ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் 17 வயதுடைய பிக்கு ஒருவர் வெளிநாட்டு பெண்ணை வன்புணர முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹப்புத்தளை வெலிமடை வீதியில் உள்ள மகிரிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு வருகை தந்த 22 வயதான போலந்து நாட்டை சேர்ந்த... Read more »

3 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற ஒருவர் கைது

பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று (05) இரவு நுவரெலியா விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை – கிரீன்லேன் ட்ரைவ் வீதியில் வசிக்கும்... Read more »

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும். தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்... Read more »

நகர்ப்புறத்தில் வசிப்போருக்கு சொந்த வீடுகள்

நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கான முதல் கட்டம் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் கொழும்பு உட்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியேற்ற... Read more »

பண்டாரவளையில் ஐஸுடன் ஒருவர் கைது

383 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் பண்டாரவளை நகரில் ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலக்கம் 211ஃயுஇ மெதஹின்னஇ கினிகமஇ பண்டாரவளையில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது ஹப்புத்தளை விசேட அதிரடிப்... Read more »