யுக்ரேன் இராணுவ 3 இலங்கையர்கள் மரணம்

யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக... Read more »

கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள்

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கையாண்டுள்ளனர். கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல் கிடைத்ததும், கடற்படை வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.... Read more »
Ad Widget Ad Widget

இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற தாய் கைது

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 3 பெண்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியைச்... Read more »

மன்னார் மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது.... Read more »

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை

மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read more »

சனத்துக்கு முக்கிய பதவி

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

மரம் ஏறி பலா பறிக்கும் யானை

கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. Read more »

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து “மனுசவி” எனும் புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய... Read more »

அரசாங்க வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் அதன் குடியிருப்பாளர்களுக்கே முழுமையாக வழங்கப்படவுள்ளதாக நகர... Read more »

குழந்தை பெறுமாறு கண்ணீருடன் கூறிய வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்க, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பெண்களிடம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற 05வது தேசிய தாய்மார்கள் மாநாட்டில் அழுதுகொண்டே வடகொரிய தலைவர் இவ்வாறு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »