புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்திற்கு குடும்பத் தகராறே காரணம் என கைதான சந்தேகநபர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக கைதான இளைஞர் பொலிஸில் வழங்கிய வாக்குமூலத்தில், தான் சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும்... Read more »

லங்கா சதொசாவில் இரண்டு பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவன இரண்டு பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 400 கிராம் பால் மாவின் விலை... Read more »
Ad Widget

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி!

திங்கட்கிழமை இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 319.9619 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306.1892 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.05.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது... Read more »

சுவிசில் ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன் 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல்... Read more »

வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக மீட்க்கப்பட்ட சடலம்

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று (15.05.2023) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய மாத்தறை மாவட்டம்

நாட்டின் பல பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் தாழ்வான நீரில் மூழ்கியுள்ளன. தவலம, நெலுவ, மொரவக, அக்குரஸ்ஸ, அத்துரலிய, பிடபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய தாழ்நிலப் பகுதிகள்... Read more »

மகிந்தவை பிரதமராக்குவது தொடர்பில் மனோகணேசன் வெளியிட்டுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு ஆட்சேபனையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பதவிகளுக்காக யாரை நியமித்தாலும் நாடாளுமன்றத்தை கலைத்து துரித கதியில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து... Read more »

கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டதற்க்கான காரணம் வெளியானது!

தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையைவிட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவசர நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில்... Read more »

கனடாவில் பட்டப்பகலில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் ஆண் ஒருவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த கோர சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 40 வயதான ரிச்சர்ட் சசாகி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல் சுமார் 1.50... Read more »