கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டதற்க்கான காரணம் வெளியானது!

தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையைவிட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அதற்கான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவசர நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முப்படையினர் ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை தவிர்த்து எவ்வித கடமை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவசர காலங்களில் பொலிஸாருக்கு கடமை ரீதியில் உதவும் வகையில் இராணுவத்தினர் இவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த பயிற்சிக்கான இறுதி திகதியை அறிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸாரைத் தவிர முப்படையைச் சேர்ந்தவர்களும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor