புற்றுநோயாளர்களுக்கு உதவி பண மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையாளர்களால் 38 இலட்சம் ரூபா பணம்... Read more »

மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அது இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
Ad Widget

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி திட்டம்

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி இயந்திரத்தை பொருத்துவது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு... Read more »

வவுனியாவில் வாள்வெட்டு – இருவர் காயம்

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம்ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது வாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர்... Read more »

ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டி- கிளிநொச்சி மாணவன் சாதனை

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான... Read more »

புலிக் கூண்டில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஷைர் பாக்’ (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்த உடலின் கால்கள் உட்பட உடலின் கீழ் பகுதியின் இறைச்சியை புலிகள் உட்கொண்டுள்ளதாக... Read more »

முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்பள்ளி... Read more »

கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மாணவன் மரணம்; சிசிடிவி HARD DISK மாயம்

அம்பாறை – சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த 13 வயது மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம, நேற்று (07) அறிக்கையிட்டுள்ளார். இந்நிலையில், மத்ரஸா சிசிடிவி கமெராவின் வன்பொருள் (HARD DISK)... Read more »

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சார... Read more »

நேரலையில் நடு விரலை காண்பித்த பிபிசி தொகுப்பாளினி

பிபிசி செய்தி தொகுப்பாளின் ஒருவர் புதன்கிழமையன்று நேரலையில் நடுவிரலை காண்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும் இது தொடர்பில் அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி எனும் குறித்த பெண், நேரலையின் போது ​​அவர் தனது நடுவிரலை காட்டியுள்ளார்.... Read more »