மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்..!

மாறுவேடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்..!

கொழும்பு – ஜிந்துபிட்டியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம், வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் குற்றவாளியான ‘பழனி ரிமோஷன்’ என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று இரவு முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்த சந்தேகநபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்த நிலையில் அதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர், பிரபல குற்றவாளியான ‘பூக்குடு கண்ணா’ தரப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி புர்கா அணிந்த பெண்ணைப் போல வேடமிட்டு வந்திருந்தமை சிசிடிவி (CCTV) கெமராக்களில் பதிவாகியுள்ளது. மற்றொரு சந்தேகநபர் கையில் பிஸ்டல் ஏந்தியவாறு நடமாடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin