வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ எனும் தலைப்பில் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையில் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பாக யோகாப் பயிற்சியினை சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ரமணராஜா வழங்கினார்.
‘ நல்லதோர் வீணை செய்தே ‘ எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ம. செல்வின் கருத்துரை வழங்கினார்.
1. தொடர்பாடல் திறமை பற்றிய விளக்கம்.
2. பண்பாடு – பண்படுத்தல்
3. கலாசார உத்தியோகத்தர்கள் சமூகத்தில் பண்படுத்தல் செயற்பாட்டினை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அவர்கள் முதலில் தாங்கள் பண்பாட்டுடன் இருப்பதை அளவீடு செய்துள்ளார்களா?
4.நிர்வாகப் பணிகளுக்கு அப்பால் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
5. ஆழ்ந்த வாசிப்பு
6. மொழியறிவு
உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ம. செல்வின் அவர்களின் கருத்துரையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஓய்வுபெற்ற ஆய்வியல் பேராசிரியர், முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ‘ பண்பாடு பேணுவோம் ‘ எனும் தலைப்பில் கருத்துரையும், செயல்முறையினையும் வழங்கியிருந்தார்.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக வடமாகாண கலை, கலாசாரஇ பண்பாடு தொடர்பில் பலவிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்இ வடமாகாணத்திலுள்ள மாவட்ட செயலகங்களிலும்இ பிரதேச செயலகங்களிலும் 40 கலாசார உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களை மையப்படுத்தியே குறித்த பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது.