தேவரையாளி இந்து கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம்

ஈழத்து எழுத்தாளர் தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம் யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் இன்றைய தினம் (15.10.2022) சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அண்மையில் காலமான பிரபல ஈழத்து எழுத்தாளனும் எழுத்துலக ஆளுமையாளனுமான தெணியான் அவர்களது நினைவாக பாடசாலையின் அதிபர் சதானந்தன் செல்வானந்தன் தலைமையில் குறித்த அக்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது மாணவர்களுக்கான உதவி நலத்திட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

சுவிசர்லாந்தில் வாழும் எழுத்தாளர் தெணியானின் மாணவர்கள் சமூக நோக்கர்கள் இலக்கிய ஆர்வலர்களது முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேவரயாளி இந்துக் கல்லூரியின் க.மூ. சின்னத்தம்பி அரங்கில் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது அங்குரார்ப்பண  சிறப்புரையை தெணியான் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபர்களுள் ஒருவரான செல்லத்தம்பி சிவச்செல்வமும் நினைவுரையை தேவரயாளி இந்துக் கல்லூரியின் ஆசிரியர் மார்க்கண்டு செல்வதாசும் நிகழ்த்தியிருந்தனர்.

இதனிடையே குறித்த அறக்கட்டளை நிதியத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு கல்விக்கான நிதி வழங்கிவைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சுவிசர்லாந்தில் வாழும் மாணவர்களின் அடுத்த தலைமுறையினரான சிவச்செல்வம்  சாலவன் அவர்களால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் நிதியை செல்வி கமலனாதன் கலைவாணி மாணவிக்கும்

வரதன் கௌதம் அவர்களால் வழங்கப்பட்ட  25 ஆயிரம் நிதியை செல்வன் டெடி சஞ்சை என்னும் மாணவனுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரு மாணவர்களது எதிர்கால கல்விச் செலவு முழுவதும் குறித்த இருவராலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor