பேருந்து, மெட்ரோ மற்றும் RER: வங்கி அட்டை(Carte bancaire) இனி பயணச்சீட்டாக மாறும் ?

பேருந்து, மெட்ரோ மற்றும் RER: வங்கி அட்டை(Carte bancaire) இனி பயணச்சீட்டாக மாறும் ?

பாரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இல்-து-பிரான்ஸ் (Île-de-France) மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ‘IDFM’ (Île-de-France Mobilités) தலைவர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். வங்கி அட்டையையே நேரடியாகப் பயணச்சீட்டாகப் பயன்படுத்தும் Open Payment திட்டம் விரைவில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

நாந்தேர் (Nanterre) போன்ற இடங்களிலிருந்து தினசரிப் பயணம் மேற்கொள்வோருக்கும், பரிசின் வரலாற்றுச் சிறப்புமிக்க மெட்ரோக்களில் பயணிப்போருக்கும் இந்தப் புதிய திட்டம் மிகப் பெரிய வசதியை ஏற்படுத்தவுள்ளது.

Open Payment என்றால் என்ன?

Banque Postale இணையதளம் விளக்கியுள்ளபடி, இந்த அமைப்பின் சிறப்பம்சங்கள்:

பயணிகள் முன்கூட்டியே பயணச்சீட்டு வாங்கவோ அல்லது பதிவு செய்யவோ தேவையில்லை.

நீங்கள் பயணம் செய்த வழித்தடங்களைக் கணக்கிட்டு, பயணத்திற்குப் பிறகு உங்களுக்கான மிகக் குறைந்த மற்றும் மலிவான கட்டணம் (Tarif le plus avantageux) தானாகவே வசூலிக்கப்படும்.

பயணச்சீட்டுப் பரிசோதகரிடம் உங்களின் வங்கி அட்டையைக் காண்பித்தாலே போதுமானது.

போக்குவரத்து நிறுவனத்தின் இணையதளத்தில் பிரத்யேகப் பக்கத்தில் உள்நுழைந்து உங்களின் பயணச் செலவுகளுக்கான முழுமையான ஆதாரத்தை (Justificatif détaillé) பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலில் 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது ‘விசா’ (Visa) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு (2019-ல்), லண்டன் போக்குவரத்தில் 55% கட்டணங்கள் இந்த ‘Open Payment ‘ மூலமாகவே செலுத்தப்படுகின்றன.

மாஸ்டர்கார்டு (Mastercard), சிபி (CB), அமெக்ஸ் (Amex) போன்ற பல முன்னணி வங்கி அட்டைகளும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன. தற்போது மிலான், சிட்னி, லோஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பல சர்வதேச நகரங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போது இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் ஒருசில பேருந்து வழித்தடங்களில் மட்டுமே இந்த வசதி பயன்பாட்டில் உள்ளது.

2026 கோடைகாலம்: வருகிற 2026 கோடைகாலத்திற்குள் இல் து பிரான்ஸ் , மாகாணத்தில் உள்ள 100% பேருந்துகளிலும் (Bus) வங்கி அட்டையை ஏற்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுவிடும்.

பேருந்துகளைத் தொடர்ந்து, படிப்படியாக மெட்ரோ (Métro) மற்றும் RER தொடருந்துகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். முதல் கட்டமாகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களுக்கு முன்னுரிமை (Prioriser) அளிக்கப்படும் என வலேரி பெக்ரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin