ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி ஆபாச மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அதற்கு முன்பு, ஆவணி மாதம் அவர் தங்கியிருந்த விடுதியில் 25 வயதான இளைஞர் ஒருவரை தாக்கியதுடன், அங்கு இருந்தவர்களின் முன்னிலையில் அநாகரீகமாக தனது உடலை வெளிப்படுத்தி பொது அமைதிக்கு பாதிப்பு விளைவித்திருந்தார்.

இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம் சுகீர்தன் தங்கராசாவிற்கு மொத்தமாக 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர் இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜை என்பதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிறைத்தண்டனை முடிந்த பின்னர் அவரை நாடுகடத்தும் வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதும், குழந்தைகளை அச்சுறுத்துவதும் கடுமையாகக் கருதப்படும் குற்றங்கள் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin