இது புராதன இலங்கையின் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்தும் மிக முக்கிய ஆவணமாகும்.
இலங்கையில் அனுராதபுரம் மாவட்டத்தில் சல்கஹவத்த என்னும் இடத்தில் சிராண் தெரணியகல என்னும் சிங்கள தொல்லியல் ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சில பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றது.
இதில் ஒரு பானை ஓட்டில் “தயா குடே” என்ற என்ற சொல் காணப்படுகின்றது. இதன் பொருள்= தயாவின் பானை. சிலர் இதனை பிராகிருதம் என்றும் மற்றவர்கள் தமிழ் என்றும் கூறுகின்றனர். குட, குடம், குடுவை என்ற சொற்கள் திராவிட மொழியின் தோற்றத்தில் பானை வகைகளைக் குறிக்கும். இந்த வார்த்தைகள் இன்றும் தமிழ் மற்றும் மலையாளத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பிராகிருதத்தில் இந்த சொல்லுக்கு அர்த்தம் இல்லை.
மேலும், இரண்டாவது எழுத்தான ‘யா’ எழுத்து தமிழ் பிராமிக்குரிய சிறப்பெழுத்தாகும். அசோகப் பிராமிக்குரிய எழுத்தல்ல.
தயா குடே என்ற சொல்லின் இறுதியில் உள்ள குறியீடு பெருங்கற்கால மற்றும் சிந்து சமவெளி முத்திரைகள் சிலவற்றில் இறுதியில் உள்ள கிராஃபிட்டி குறியீடுகளை ஒத்தவையாகும்.
இந்த பானை ஓட்டினை கால பகுப்பாய்வுக்கு thermo- luminescence உட்படுத்திய போது இதனுடைய காலப்பகுதி கி.மு 700- 500 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இலங்கைக்கு விஜயன் குழுவினர் வருவதற்கு முன்னரோ அல்லது சமகாலத்திலோ இங்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தொல்லியல் சான்று இதுவாகும்.
இலங்கைக்கு விஜயன் குழு வருகை தந்ததற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் கி.மு 7-5 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவது போல் சிங்கள ஆய்வாளர்களே ஒப்புக்கொண்டதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
Saddhamangala Karunaratne in Epighraphia Zeylanica Special Volume VII,1984 இல் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

