ஐக்கிய இராச்சியம் முழுவதும் ‘பேட்ரோ புயல்’

இன்று (பெப்ரவரி 19, 2026) ஐக்கிய இராச்சியம் முழுவதும் ‘பேட்ரோ புயல்’ (Storm Pedro) காரணமாக கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது.

ஐரோப்பிய வானிலை நிறுவனமான ‘மெட்டியோ பிரான்ஸ்’ (Meteo France) மூலம் பெயரிடப்பட்ட இந்தப் புயல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வேல்ஸ் (Wales) பகுதியின் பெரும்பாலான இடங்களுக்கு ‘மஞ்சள் நிற பனி எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். சாலைகளில் பனி உறைந்து காணப்படுவதால் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தெற்கு இங்கிலாந்துபட பகுதி நேற்று புதன்கிழமை மாலை முதல் தென் கடற்கரைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் டஜன் கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள் (Flood Alerts) தற்போது விடுக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் காற்றைத் தொடர்ந்து, வரும் நாட்களில் நாடு முழுவதும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு (Rain, Ice, and Snow) நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Recommended For You

About the Author: admin