யாழ். வண்ணையம்பதி வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் திருச்சுமங்கலி உற்சவம்

( யாழ் நிருபர் ரமணன் )

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வண்ணையம்பதி வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் திருச்சுமங்கலி உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதில் தீர்க்கதரிசை, அதிர்ஷ்ட வரங்களை தந்தருளும், நீண்ட ஆயுள் நிலைக்க வேண்டிய காலம் தொட்டு இடம்பெறும் மகிநுட்ப பெண்களுக்கான விரத உற்சவம் இனிதே நடைபெற்றன.

கருவரையில் வீற்று அருள்பாலித்து சிறந்துவிளங்கும் வேங்கடவரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவிக்கும், சண்டேஷ்வரப்பெருமானுக்கும் விசேட அபிசேக, ஆராதனைகள் என்பன இடம்பெற்று வசந்த மண்டவத்தில் அருள்பாலித்த எம்பெருமானின் மஹாலட்சுமிக்கான விஷேட ஆராதனை இடம்பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Recommended For You

About the Author: webeditor