போர்தான் முடிவு!
ஈரானுடனான அமெரிக்க பேச்சுவார்த்தை நடைபெறாமலேயே முறிந்தது!
அமெரிக்க,இஸ்றேல் தாக்குதல் படைகள் சற்றுமுன்னர் அவசர அவசரமாக போருக்கான தயார்படுத்தல்களை செய்துவருவதாக சர்வதேச தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கும்,அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு சிறிய அளவிலான பேச்சுவார்த்தையொன்று நடைபெறுவதாக இருந்தது.
அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈரானிடம் முன்வைத்த நான்கு நிபந்தனைகளும் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அமெரிக்காவின் இறுக்கமான நிலைப்பாடாக இருந்தது.
ஆனால் ஈரான் அதற்கு உடன்படாமல் அமெரிக்காவை சீண்டும் விதமாக ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை வேவுபார்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் அமெரிக்கா வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட ஈரானிய ட்றோணை சுட்டுவீழ்த்தியது.
ஆனால் ஈரான் மறுபடியும் சில ட்றோன்களை அனுப்பி அமெரிக்காவை மீண்டும் மீண்டும் சீண்டும் தொடர் நடவடிக்கைகளை செய்துவருவதாக சர்வதேச செய்திகள் ஆதாரங்களோடு தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஈரானின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ உடைகளை அணிந்தவண்ணம் அமெரிக்க கொடியை எரித்து அமெரிக்காவை சாகடிப்போம் என்று கூக்குரலிட்டு கோஷம் எழுப்பி அமெரிக்க யொறுமையை தொடர்ந்து சோதித்ததால் ஈரானுடன் நாளை மறுதினம் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை இனி நடைபெறாதென தற்போதுகிடைக்கப்பெற்ற தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.
“எனவே போர்தான் இனி கடைசி தீர்வாகும்”


