பெற்றோரைக் கூடக் கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் சமூகத்தில் வீட்டில் இருக்கும் நாய்களைத் தங்கள் பிள்ளைகளைப் போல நேசிக்கும் மனிதர்களும் இவ் உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் தமது இறந்த நாய்க்கு இறுதி சடங்குகளை அண்மையில் ஒரு குடும்பத்தினர் செய்துள்ளனர்..
இச் சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இது குறித்து நாயின் உரிமையாளரான விந்தியா சித்தாரிகா பெர்னாண்டோ தெரிவித்ததாவது,
லீசா (இறந்த நாயின் பெயர்) ஒரு விலங்கு அல்ல,அது ஒரு குழந்தை .
வீட்டின் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த லீசா இறந்தவுடன் என் குடும்பத்தார் தொலைபேசியின் ஊடக அழைத்து இது குறித்து எனக்கு தெரியப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து ஒரு குழந்தை இறந்தால் செய்யப்படும் மத ரீதியான இறுதி சடங்குகள் லீஸாவிற்கும் செய்யப்பட வேண்டும் என கூறினேன்.
இன்று இவ்வுலகை விட்டு சென்ற லீசாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம் என குடும்பத்தினர் கண்ணீருடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் .