பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மாணவர்களிடையே போதைப் பாவனை தினமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதனை வவுனியா தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தட்சாயினி வசீகரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித் தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
வடக்கில் தற்போது மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. மாணவர்களை பராமரிப்பது ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஒரு சவாலான விடயமாகக் காணப்படுகின்றது
அதிலும் வடக்குப் பகுதியில் இந்த நிலைமை மோசமாகவே காணப்படுகின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணித்து அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மாணவன் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டுவிட்டால் அது ஏனைய மாணவர்களிடம் விரைவாகப் பரவுகிறது.
எனவே எமது மாணவ சமூகத்தை மிக அவதானமாகக் கண்காணிக்க வேண்டியது எமது கடமை என்று கூறியுள்ளார்.