மியன்மாில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் இராணுவம்!

மியன்மாில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் இராணுவம்!

மியன்மரில் கடந்த ஒரு மாத காலமாக மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில், இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக் கட்சி (USDP) அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு மியன்மரில் நடத்தப்பட்ட முதல் பொதுத்தேர்தல் இதுவாகும். 2025 டிசம்பர் 28, 2026 ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 ஆகிய திகதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் இராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி கீழ் சபையில் (Pyithu Hluttaw) 231 இடங்களையும், மேல் சபையில் (Amyotha Hluttaw) 108 இடங்களையும் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (NLD) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தத் தேர்தல் “நேர்மையற்றது” மற்றும் “போலியானது” என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகள் விமர்சித்துள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் ஏப்ரல் மாதம் புதிய அரசாங்கம் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Recommended For You

About the Author: admin