ஈரானில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்ய பணியாளர்களை வெளியேற்றத் தயாராகிறது
ஈரானில் நிலவும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யா தனது நாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தேவைப்பட்டால், ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய ஊழியர்களை உடனடியாக வெளியேற்றத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ‘ரோசாட்டம்’ (Rosatom) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிபர் புதின் குறிப்பிட்டது போல, ரஷ்யாவால் கட்டப்பட்ட இந்த ஒரே ஒரு அணுமின் நிலையத்தில் தற்போது நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒருவேளை இந்த அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது 1986 செர்னோபில் விபத்தை விட மோசமான ஒரு அணுசக்திப் பேரழிவை உருவாக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வெளியேற்ற நடவடிக்கைகளுக்கான (Evacuation Plan) அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக ரோசாட்டம் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் தெரிவித்துள்ளார்.

