உறைபனியில் அமெரிக்கா – காட்டுத்தீயில் ஆஸ்திரேலியா – உலகை மிரட்டும் அதீத காலநிலை மாற்றங்கள்

உறைபனியில் அமெரிக்கா – காட்டுத்தீயில் ஆஸ்திரேலியா – உலகை மிரட்டும் அதீத காலநிலை மாற்றங்கள்

பூமியின் சமுத்திரங்களில் பதிவாகியுள்ள மிக அதிகப்படியான வெப்பம் காரணமாக, உலகெங்கிலும் ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட அதீத காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் பெரும் பகுதிகள் தற்போது சக்திவாய்ந்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளதுடன், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மறுபுறம், ஆஸ்திரேலியாவில் வெப்பம் 40°C க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வரண்ட காலநிலை காரணமாக பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவசர கால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடல் மட்ட வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதே இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகும். சமுத்திர வெப்பமானது வளிமண்டலத்தை நிலைத்தன்மையற்றதாக்கி, குளிர் காலத்தை அதிக குளிராகவும், கோடை காலத்தை அதிக வெப்பமாகவும் மாற்றுகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

#TamilNews #snowfall #heattemprature #america #australia

Recommended For You

About the Author: admin