அடையாள பணிப்புறக்கணிப்பை அறிவித்த அரச வைத்தியர்கள்..!

அடையாள பணிப்புறக்கணிப்பை அறிவித்த அரச வைத்தியர்கள்..!

நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன வழமைப்போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin