அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை..!
இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (19) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு விமித் தினசர தலைமை தாங்குகிறார். அயர்லாந்து அணியை ஒலி ரிலே வழிநடத்துகிறார்.
‘ஏ’ பிரிவின் கீழ் போட்டியிடும் இலங்கை அணி, கடந்த போட்டியில் ஜப்பானுக்கு எதிராக 203 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றிருந்தது.
அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்களைக் குவித்தது.
அதற்குப் பதிலளித்த ஜப்பான் அணியால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

