இன்பருட்டி பகுதியில் கஞ்சா மீட்பு..!
இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இன்பருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் பருத்திதுறை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பருத்திதுறை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தலைமை போலீஸ் பொறுப்பு அதிகாரி பிரயந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

