புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..!

புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..!

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

 

மேலும், காயமடைந்த பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin