உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில், நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள படுகொலை நினைவாலயத்தில் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

 

வரலாற்றுப் பின்னணி:

 

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது.

 

தமிழர்களின் கலாசார மற்றும் கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டைத் தடுக்கும் நோக்கில், அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

இந்தக் கலவரத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் மின்சாரம் தாக்கியும் ஏனைய காரணங்களாலும் 9 தமிழர்கள் பரிதாபமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்று 52 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin