தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..!
கிறிசலிஸ் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம்(08.01.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பெண்கள்,இளைஞர் தலைவர்கள்,உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் என 60பேர் கலந்து கொண்டு இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண் அறிவுக் கருவிகளின் பயன்பாடு உள்ளிட்ட தெளிவுகளைப் பெற்றிருந்தனர்.
மேற்படி கருத்தமர்வில் வளவாளர்களாக ஏற்கனவே கிறிசலிஸ் நிறுவனத்தினால் மூன்று தினங்கள் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பயிற்சிநெறியில் பயிற்றப்பட்ட பயிற்றுநர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் நிகழ்வில் கிறிசலிஸ் நிறுவன வடக்கு மாகாண திட்ட பிராந்திய இணைப்பாளர் ம.பிரபாகரன்,முதன்மை பயிற்றுவிப்பாளர் யோ.ஷர்மிக்,கிறிசலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


