மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..!

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..!

இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் புகையிரதம் வரும்போது கூலர் வாகனமொன்று கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக செயற்பட்டு கூலர் வாகனத்தை மறித்துள்ளனார். இதன்போது புகையிரதமும் அந்நேரத்தில் பயணித்துள்ளது.
இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பாக புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin