இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய, இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண தொடருக்காக அமெரிக்க குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும் 18 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷெஹான், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 195 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன் 16 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
87 முதல் தரப் போட்டிகளில், 145 இன்னிங்ஸ்களில் ஷெஹான் 13 சதங்களையும் 32 அரைச்சதங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

