மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..!

மத்துகம பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுதலை..!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பிரதேச சபை தவிசாளர் கசுன் முனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபரான தவிசாளரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மத்துகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள மத்துகம பிரதேச சபையின் தவிசாளர், குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (31) முற்பகல் மத்துகம உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வந்து சரணடைந்தார்.

 

அங்கு கைது செய்யப்பட்ட அவர், மத்துகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

தவிசாளர் கசுன் முனசிங்க தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அதன் செயலாளர் நெலு நிஷாந்தி இத்தகொட, மத்துகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், பின்னர் அவர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

எவ்வாறாயினும், தவிசாளரைக் கைது செய்வதற்காக பொலிஸார் நேற்று பிற்பகல் மத்துகம பிரதேச சபை வளாகத்திற்குச் சென்ற போது, தவிசாளர் சபை வளாகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

Recommended For You

About the Author: admin