சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்…

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்…

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது.

இன்று (19) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன.

குறித்த தடுப்பூசியை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு உள்ள பொறுப்பிலிருந்து அவர்கள் எவ்விதத்திலும் தப்பித்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவின் இணையத்தளத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மாத்திரம் தரக் குறைபாடுகள் பரிசோதனை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

‘ஒன்டன்செட்ரோன்’ மருந்திற்குள் பக்டீரியா காணப்பட்டமையே அண்மைய சம்பவமாகும்.

மேலும், குறித்த நிறுவனத்தின் மேலும் 9 மருந்துகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும் என வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin