2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர்.

2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழுத் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று (19) கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இதன்போது, கடந்த தெரிவுக்குழுவினால் உலகக் கிண்ணத்திற்காக பெயரிடப்பட்டிருந்த 25 பேர் கொண்ட குழாமில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.!

Recommended For You

About the Author: admin