சர்ச்சைக்கு பதிலளித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்..!

சர்ச்சைக்கு பதிலளித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்..!

வட மாகாண மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (15) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்கள்.

இதன் போது, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீனவர் ஒருவர் இந்திய தூதரகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இக்கருத்து பல்வேறு தரப்பினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இக் கருத்து தொடர்பில் இன்று யாழில் வடக்கு மாகாண மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டது.

இந்திய தூதரகம் அகற்றப்படவேண்டும் என்பது குறித்த மீனவரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண மீனவர்களின் கருத்தாக ஆக அமையாது என்று இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனை யாழில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகத்திற்கு சென்று தெளிவு படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகத்துக்கு சென்று தமது வருத்ததிணை தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin