அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..!

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..!

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14.12.2025) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை மண்சரிவு மற்றும் வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயல் தாக்கம் காரணமாக 391401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin