மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் மகிழுந்து விபத்து..!
மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து இன்று (14.12.2025) காலை மைலம்பாவெளியில் வைத்து வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் மாடு ஓன்று உயிரிழந்ததுடன் மகிழுந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தோர் காயமடைந்த நிலையில் அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் மட்டக்களப்பு போதனாவைத்தியாசலைக்கு அனுப்பப்பிவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தோர் தெரிவிப்பு.
மட்டக்களப்பில் மாட்டுடன் மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்தே வருகிறது. மழை காலம் என்பதால் மாடுகள் அதிகம் பிரதான வீதியையே நாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.
வீதிப் போக்குவரத்தை சீரமைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற போதும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை பாரிய விமர்சன அலைகளை சமூகத்தில் ஏற்ப்படுத்தி வருகிறது.

