அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை..!

அனர்த்தத்திற்கு பின் எழுந்த சர்ச்சை..!

யாழ் பல்கலைக்கழக நிபுணர் விளக்கம்.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

 

இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டு வரும் தகவல்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கமளித்து அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

 

குறித்த பதிவில், “நான் இலங்கையின் புவி நடுக்கம் தொடர்பான சாத்தியத் தன்மை பற்றி மக்களுக்கு விழிப்பூட்டும் பதிவு ஒன்றினை இட்டிருந்தேன்.

 

அது தொடர்பாக ஒரு சிலர் அறிவியல் ஆதாரமற்று விமர்சிக்கின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

 

பொதுவாக ஒரு கருத்து தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனம் எப்பொழுதும் வரவேற்கக் கூடியது.

 

ஆனால் அது வெறும் வாய்ச் சொல்லில் இருக்காமல் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு இணைந்து இருப்பது தான் விரும்பத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin