4500 வீடுகளை தரைமட்டமாக்கிய டித்வா!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 1800 வீடுகள் முழுமையாகவும் 13,044 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் 573 வீடுகள் முழுமையாகவும் 4696 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் 480 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 404 வீடுகள் முழுமையாகவும் 7291 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகள் முழுமையாகவும், 11,575 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாகவும் 453 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin