வழமைக்கு திரும்பியது ரந்தம்பே – மஹியங்கனை மின் பரிமாற்றக் கட்டமைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மஹியங்கனை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சீரற்ற காலநிலையால் குறித்த மின் பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் மின்வடங்களில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin