இந்தியாவின் 9வது உதவி விமானம், பல்வேறு அதி அவசியமான பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது!
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா தனது “சாகர் பந்து” (Sagar Bandhu) என்ற பேரிடர் உதவி நடவடிக்கையின் கீழ் அனுப்பி வைத்த 9-வது விமானம், இன்று (டிசம்பர் 06) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகவும் பெரிய சரக்கு விமானமான C-17 ரக விமானம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ஆக்ரா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரமாகப் பயன்படுத்தத் தேவையான பேலி பாலம்: 110 அடி நீளமும், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பேலி பாலத்தின் பாகங்கள். JCB, இயந்திரம்.
அத்துடன் பேலி பாலத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய இராணுவத்தின் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த 13 பொறியியலாளர்கள் அடங்கிய குழுவும் இந்த விமானத்தில் வந்துள்ளனர்.


