மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது.
மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின் Y – 12 ரக விமானம் 30.11.2025 அன்று ரத்மலான விமானப்படை தளத்திலிருந்து சீனாக்குடா விமானப்படைத்தளத்தை வந்தடைந்தது.
திருகோணமலை விமானப்படை தளத்தில் இருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு Y12 ரக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


