கிளிநொச்சி மாவட்டத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்..!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதகான கள விஜயத்தினை கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
மாவட்டச்செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்து நிலமைகளை கேட்டறிந்ததோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தார்.
முதலாவதாக கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் (A35 ) போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பாலத்தின் நிலமைகளையும் அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்தினையும் பார்வையிட்டதுடன் இரானுவத்தினரின் முழுமையான ஒத்துழைப்பிற்கான பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.


