மாவில் ஆறு அணைக்கட்டு: உடையும் அபாயம் !
அருகிலுள்ள மக்கள் அவதானம் !
கொழும்பு – மகாவலி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான நீரின் வரத்து காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு ஆகியன பெரும் அழுத்தத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொள்ளளவை மீறிய நீர்வரத்து மகாவலி ஆற்றில் தற்போது அதன் கொள்ளளவை விட அதிகளவிலான நீர்வரத்து காணப்படுவதாகவும், இது தாழ்வான பகுதிகளில் வெள்ள மட்டங்கள் உயரக் காரணமாக இருப்பதாகவும் குணசேகர தெரிவித்துள்ளார்.
மீளாய்வுக் குழுவினர் சிக்கல் மதகு உடையும் அபாயம் இல்லை என அதிகாரிகள் எதிர்பார்த்த போதிலும், மதகு அமைந்துள்ள பகுதி முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியிருப்பதால், ஆய்வு மற்றும் பரிசோதனைக் குழுக்களால் அந்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
மக்களுக்கு எச்சரிக்கை மதகுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதுடன், முடிந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்படை மற்றும் இதர மீட்புக் குழுவினர் நாளை காலை மாவில் ஆற்றுப் பகுதிக்குச் சென்று நிலைமையைச் சோதனையிட்ட பின்னரே, இது தொடர்பான மேலதிகத் தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

