மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இரணைமடுக்குளத்தின் தற்போதைய நிலமை மற்றும் அவதானம் செலுத்தவேண்டிய காரணிகள் குறித்து இரணைமடு நீர்ப்பாசன திணைக்களபணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர், பொறியியலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இரணைமடு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஆகியோர் நிலமைகளை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்திருந்தனர்.
ஆலோசனைகளின் அடிப்படையில் வால்கட்டுப்பகுதியானது வெட்டப்படுகின்து
குளத்தின் நீர்வரத்தானது 40அடியினை எட்டுகின்ற சந்தர்ப்பத்தில் வெட்டப்பட்ட பகுதியூடாக மேலதிக நீரானது வெளியேற்றப்படும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள்

